Tuesday, October 29, 2013

Ulaga Samathana Malar

Samathanam Charitable Trust

                 சமாதான மலர்
                                                                                                                                 September-November 2013
 இந்த மலரின் உள்ளே    

1. சமாதானமா இருக்கீங்களா?

2. பீஸ் ஆப் மைண்ட் இல்லேன்னா செக் பண்ணுங்க, ப்ளீஸ்!!

3. கடைசி காலத்தில் சமாதானம் சாத்தியமா?

 4. யூத்-பேரண்ட்ஸ் கார்னர் 

5. சமாதானத்தைத் தேடி...........ஒரு பயணம்
  6. இந்த சமாதான மலரைப் பற்றி...

7. கேள்விகளுக்கு விடை சொல்லுங்க-பரிசைத் தட்டிச் செல்லுங்க!

8. சங்கிலிகளின் பிணைப்பில் சமாதானம்

9. வெளியே புகைவது நான் ஆனால் உள்ளே எரிவதோ நீ!

மன நிம்மதி இல்லேன்னா என்ன புண்ணியம்?
    “நான் உங்க எல்லார்கிட்டேயும் ஒண்ணு கேக்கணும்னு ரொம்ப நாளாவே யோசிச்சிட்டு இருந்தேன். ரொம்ப பிஸியா இருந்துட்டேன். ஸாரி. இப்பதான் டைம் கிடைச்சிது.
   வந்து... எங்க   வீட்ல எல்லா வசதியும் இருக்கு. சொந்த வீடு, காரு, துட்டு, சமுதாயத்தில்  மரியாதைன்னு கண்டவற்றிற்கெல்லாம் குறைச்சலே இல்ல. ஆனா, என்னன்னு தெரியல்ல...எப்பவும் ஒரு இனம் புரியாத  டென்ஷன் இருந்துக்கிட்டே  இருக்கு. மனசு படபடன்னு லிமிட்டையும் தாண்டி அடிச்சிக்கிட்டு இருக்கு. பீஸ் ஆப் மைண்ட் கம்ப்ளீட்டா இல்ல.  மனநிம்மதிக்காக டிவி, சினிமா, கம்ப்யூட்டர், காமெடின்னு எதை பார்த்தாலும் கொஞ்சநிமிஷம்தான் பேருக்கு சிரிக்க முடியுது. அதுவும் போலியாகத்தான் இருக்கு. அதுக்கப்புறம் அவ்வளவுதான்.
            சில நேரத்தில என்ன வேலையை செஞ்சாலும் மனச ஒருமுகப்படுத்த முடியல. கையும் ஓட மாட்டக்குது. காலும் ஓட மாட்டக்குது. என்னோட ஆசை எல்லாம், கொஞ்ச நாளாவது சமாதானமா, சந்தோஷமா, பீஸ் ஆப் மைண்ட்டோட இருந்திட்டு கண்ண மூடிடலாம்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்.
ஆனா, ஒரு வழியும் தெரியலயே. எவ்வளவு துட்டு இருந்து என்னத்துக்கு? மன நிம்மதி இல்லேன்னா என்ன புண்ணியம்?” என்று கப்பலே கவுந்த மாதிரி கவலையோடு இருந்தீங்கன்னா....கன்னத்துல இருந்து கைய தூர எடுங்க! முதல்ல, ப்ளீஸ். நம்பிக்கையோடு இந்த சமாதான மலரை கைல எடுங்க. கடைசி பக்கம் வரை படிங்க, டைம் இருந்தா. கண்டிப்பா உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைக்கும். அப்புறம் கொஞ்சம் சீரியஸா திங்க் பண்ணுங்க. அதுக்கப்புறம் உங்க மனசு என்ன சொல்லுதோ அத செஞ்சிங்கன்னா பீஸ் ஆப் மைண்ட் அழையா விருந்தாளியாக உங்களோட வீடு தேடி வந்துவிடும்.
சமாதானப் பிரியன் Dr. M. Christhu Doss
1. சமாதானமா இருக்கீங்களா?
என்ன இது? கேள்வியே ஒரு மாதிரி இருக்கு.சமாதானம்னா எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே? என்னத்தப் புதுசா சொல்லப் போறாங்கன்னு சந்தேகப்பட்டு இதைப் படிச்சீங்கன்னா உங்க டைம்தான் வேஸ்ட். ஏனென்றால் இதில நாம் கத்துக்கப் போற பாடங்கள் நிறைய இருக்கு. என்னன்னு கேக்குறீங்களா.
இப்போதெல்லாம் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சியிலும் வரும் பெரும்பாலான செய்திகள் அதிர்ச்சியாகவும், கல்நெஞ்சும் கூட கரைந்து உருகிப் போகும் அளவுக்கும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தத் துயர நிலைமை இப்படி நீடிச்சிக்கிட்டே இருந்தா, மனிதக் கட்டுப்பாட்டையும் மீறி இன்னொரு படி மேல போச்சின்னா, கடவுளைத்தவிர மனிதனாலும் அவன் கண்டு பிடித்த டெக்னாலஜினாலும் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது என்பது உறுதி. அப்படியே மனிதக் கட்டுப்பாட்டை மீறிப் போகும்போது, சிறிய மீனைப் பெரிய மீன்கள் விழுங்குவது போல், சமாதானம் என்ற இந்தச் சிறிய மீனைப் பொறாமை, சண்டை, பேராசை, கொலை, கொள்ளை, தீவிரவாதம், லஞ்சம், கொடுமை போன்ற பெரிய மீன்கள் விழுங்கிவிடும்.
அப்படி உயிரோடே விழுங்கிவிடும் நேரத்தில், “சமாதானம்னா என்ன? அது எங்கே கிடைக்கும்? எப்படி இருக்கும்?”னு நீங்களும் நானும் கேட்கும் அளவுக்கு ஒருவரும் இதுவரைக் கண்டிராத இருண்ட காலத்துக்குள் தள்ளப்பட்டுவிடுவோம். இதை நினைக்கும்போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது என்றால் அந்த இருண்ட காலத்தில் நாம் இருந்தா எப்படி இருக்கும்? யோசிச்சிப் பாருங்க. யோசிக்க எங்க டைம் இருக்குன்னு நினைக்கிறீங்களா? நம்மளோட அன்றாட கடமைகளுள் இதுவும் ஒண்ணுதான். கொஞ்சம் டைம் எடுத்து ஒவ்வொருவரும் சிந்திக்கணும். சீரியஸ்ஸா சிந்திக்கணும். ஆழ்ந்து சிந்திக்கணும். அறிவுபூர்வமாக சிந்திக்கணும். ஆன்மீகத்தோடு சிந்திக்கணும். நான், என் வீடு, என் குடும்பம், என் பிள்ளைகள் என்று “கிணற்றுத் தவளைகளாக” நாலு சுவருக்குள் எவ்வளவு நாள்தான் இருக்கப் போகிறோம்?
ஏதோ சும்மா இந்த உலகத்துல பொறந்தோம், நாலு எழுத்து படிச்சோம், வேலை செஞ்சோம், சம்பாத்யம் பண்ணோம், கல்யாணம் முடிச்சோம், காரு வீடுன்னு வாங்கினோம், நல்லா மூக்கு பிடிக்க மூனு நேரமும் சாப்டோம், தூங்கினோம். ரிடையர்மெண்டுக்கு அப்புறம் வரப்போற பென்ஷன்ல உக்காந்து சாப்பிட்டுவிட்டு, பெர்மனண்டா மண்ணுக்குள்ள மறைஞ்சி விடலாம்னு இருக்காம கொஞ்சம் பிறருக்காகவும் வாழ நம்மை தயார்படுத்தும் நேரம் வந்துவிட்டது. இந்த வாழ்க்கையில், நமது பிரதம நோக்கமே  மற்றவர்களுக்கு உதவ  வேண்டும் என்பதுதான். இதை விட்டுவிட்டு “எனக்கே பீஸ் ஆப் மைண்ட் இல்ல, ஆயிரத்தெட்டு வேலை இருக்கு, தலைக்கு மேல வேல இருக்கு”ன்னு சொல்லி எஸ்கேப் ஆயிடலாம்னு நினச்சிங்கன்னா…அயம் சாரி! “தன்னலமிக்க சுயநலவாதி” என்கிற பயனற்ற பட்டம்தான் கிடைக்கும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னமாதிரி சுயநலம் என்ற இருளில் நடப்பதை விட பொதுநலம் என்ற வெளிச்சத்தில் நடப்பதை கடைபிடிக்கும் காலம் வந்துவிட்டது. இப்ப சொல்லுங்க! எதை செலெக்ட் பண்ண போறீங்க?
மற்றவர்களது சந்தோஷத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் ஏதாவது செய்யணும்னு எப்பவாச்சும் நினச்சிங்களா? பதில் சொல்லாட்டாலும் நீங்க உங்களையே கேட்டுப் பாருங்க. டைம் இல்லேன்னு மட்டும் சொல்லாதீங்க, ப்ளீஸ்.   அடுத்தவங்க சந்தோஷத்திலும் சமாதானத்திலும் நமக்குக் கிடைக்கிற பீஸ் ஆப் மைண்டை வேறே எதுவும் கொடுக்கமுடியாது என்பதுதான் கடைந்தெடுத்த உண்மை. டிரை பண்ணிப் பாருங்க. ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு பிறருடைய சமாதானத்திற்காகவும், ஊரின் சமாதானத்திற்காகவும், நாட்டின் சமாதானத்திற்காகவும், உலக சமாதானத்திற்காகவும் ஏதாவது செய்வதை ஒரு தீர்மானமாக ஏற்று முன்னேறிச் செல்ல வேண்டும்.
ஏன் இந்த வம்பு? செவனேன்னு, நான் உண்டு என் குடும்பம் உண்டு, என் வேலை உண்டுன்னு இருந்துக்கிட்டே இருந்தோம்னா “சமாதானம் எந்தக் கடையில கிடைக்கும் அண்ணாச்சி?”னு யாராவது கேட்டாங்கன்னா நீங்களும் நானும்தான் அதுக்குப் பொறுப்பு.
அன்புடன் கூடிய, தன்னலமற்ற சமூக சேவையின் மூலம் ஒருவரும் ஒருநாளும் கண்டிராத அளவுக்கு சந்தோஷத்தையும், தன்னிறைவான சமாதானத்தையும் மக்களுக்குத் தர முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை ஆணி வேராகக் கொண்டு இயங்கி வரும் இந்த “சமாதான மலர்” குடும்பத்தில் உங்களையும் மெம்பராக சேர்த்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஒரு கையை வைத்துத் தட்டினால் ஓசை வராது என்பதனால்தான் மக்களின் கருத்துக்கு மிகவும் மதிப்புக் கொடுத்து, ஸ்பெஷல் பகுதிகளாகப் பிரித்து அனைவரும் பயன் பெறும் வகையில் இந்த சமாதான மலரை டிசைன் செய்துள்ளோம். எனவே உங்கள் கருத்துக்கள் எதுவாயினும் சமாதானத்தை மையமாகக் கொண்டு இருந்தால் அதை பல ஆயிரம் பேருக்குப் பயனாகும் நோக்கத்தோடு கண்டிப்பாக வெளியிடுவோம். வாங்க! சமாதான உலகைப் படைபோம். சந்தோஷமாக வாழ்வோம். 
சமாதானப் பிரியன்
2. பீஸ் ஆப் மைண்ட் இல்லேன்னா செக் பண்ணுங்க, ப்ளீஸ்!!
ஏனுங்க? எப்படி இருக்கீங்க?ன்னு யார்கிட்ட கேட்டாலும், “நல்லா இருக்கேன் பிரதர், ஆனா!!!” என்று இழுக்க ஆரம்பித்து விடுவார்கள். சொல்லுங்க என்ன ஆச்சுன்னு நீங்க கேள்விக் கணையை தொடுத்தீங்கன்னா, “ஆமா பிரதர், ஏன் கேக்கிறீங்க.ஆபிஸ்ல பிஸி, வீட்ல பிஸி, வேலையில் டென்ஷன், பிஸினஸ்ல நொடி, கம்பனிக்காரன் பிழிஞ்சு எடுக்கிறான், ஓவர் டூட்டி வாங்குறான், ஆனால் சம்பளம் குறையாதான் கொடுக்கிறான், என்ன பண்ணுவதென்றே தெரியல, பீஸ் ஆப் மைன்டே இல்ல” என்று அடுக்க ஆரம்பித்து விடுவார்கள். எனினும், வாழ்க்கை என்கிற படகில் எங்கேயோ ஓரத்தில் ஒரு சிறிய ஓட்டை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு சரி செய்வதுதான் புத்தியுள்ள மனிதனுக்கு அடையாளம்.
பிரச்சனைகள் வருகின்றபோதும், அதற்கான தீர்வுகளை காண நாம் துடிக்கின்றபோதும், நமக்கு நல்ல ஆலோசனையை கொடுத்து எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தெழிவு படுத்துகிறது அமைதியின் நேரம் (கொயட் டைம்).  பிரச்சனைகளை முழுமையாக புரிந்துகொள்ளவும், அவைகளை அணுகவேண்டிய முறைகளைப்பற்றியும், நண்பர்கள், குடும்பம், சக பணியாளர்கள், மற்றும் பெற்றோர்கள், ஆகியோரது சப்போர்ட் எந்த அளவுக்கு ஒரு மனிதனுக்கு தேவை என்பதை உணர்த்தவும், சுயபரிசோதனை செய்து குறைகளை நீக்கவும், நிறைகளை நிரப்பவும், இந்த அமைதியின் நேரம் கைகொடுக்கும். இது ஒரு கோட்பாடு அல்ல, முற்றிலும் உண்மையே. 
            கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கடவுளோடு கொயட் டைம் வைத்துக்கொள்ளலாம். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஆதாம், மோசஸ், யோசுவா, டேவிட், ஜேக்கப், போன்றவர்கள் இந்த கொயட் டைம் மூலம் கடவுளோடு மிகவும் நெருக்கமாக இருந்ததும், அதன்மூலம் புதுப்பிக்கப்பட்ட பலனையும், ஊக்கத்தையும், அடைந்து மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தார்கள் என்பதையும் நாம் அறிந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.  மிகவும் பதற்றமாக இதயம் கூட இந்தவகையான சுய பரிசோதனையின் மூலம் ஆறுதலும், தேறுதலும், அமைதியும், இன்பமும், அடைய முடியும். இந்த கொயட் டைம் தியானமாகவோ, பிரார்த்தனையாகவோ, தனியாகவோ, அல்லது குடும்பமாகவோ அமர்ந்து ஆலோசிக்கும் செயலாகக்கூட இருக்கலாம்.
            இதை விட்டுவிட்டு காற்று அடிக்கும் திசைக்கு ஏற்ப நெளிந்து கொடுத்து “ஆகட்டும் பார்க்கலாம்” என்று டயலாக் அடித்துக்கொண்டு ஒரு டென்ஷனோடு இன்னொரு டென்ஷனையும் கூட்டிக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால் அதன் விளைவு விபரீதமாகக் கூட முடியும். பீஸ் ஆப் மைண்ட் என்பது பகல் கனவாகவே இருந்துவிடும். கொயட் டைம் எடுத்து சிந்திச்சிப் பாருங்க. உங்களுக்கு விடை கிடைக்கும். அப்புறம், பீஸ் ஆப் மைண்ட் உங்க பக்கம்தான்.
      இந்த பிஸியான உலகத்துல பர்சனல் மற்றும் பேமிலி வேலையைப் பார்ப்பதற்கே நிறைய பேருக்கு டைம் இல்ல. ஆனா சில பேர் எவ்வளவு பிஸியா இருந்தாலும் அடுத்தவங்களைப் பற்றி நாலு வார்த்தை “நறுக்” என்று சொல்லாட்டா அவங்களுக்குத் திருப்தியே இருக்காது. அடுத்தவங்களைப் பற்றித் தவறாகப் பேசுவதிலும் தப்புக்கணக்கு போடுவதிலும் இவங்க கெட்டிக்காரங்க. “இவர்கள் அடுத்தவர்களைக் குறை சொல்வதற்கே மனித அவதாரம் எடுத்தவர்கள் என்று கூட நான் சில நேரம் நினைப்பது உண்டு” என்று மகாத்மா காந்தி ஒருமுறை கூறியுள்ளார். “இவர்களை அன்னப் பறவையிடம்தான் அனுப்ப வேண்டும் பாடம் கற்றுக் கொள்வதற்கு” என்று ஜவஹர்லால் நேருவும் ஒருமுறை கூறியுள்ளார்.
எமி கார்மைக்கல் என்ற அயர்லாந்து நாட்டு மிஷினரி தமிழ்நாட்டில் டோனாவூர் பகுதியில்  மக்கள் பணி செய்து வரும்பொழுது அவருக்கு எதிராக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பொழுது அவர் அவர்களைப்பார்த்து சொன்னது: "என் இனிய நண்பர்களே, ஏன் உங்களுடைய அருமையான சக்தியை வீணான முறையில் செலவழிக்க நினைக்கிறீர்கள்? அடுத்தவர்களைப்பற்றி வேண்டுமென்றே குறை கூறுவதினால் உங்கள் நேரத்தையும், உடல் சக்தியையும், மட்டுமல்ல உள்ளத்தின் சமாதானத்தையும் தேவையில்லாமல் இழக்கிறீர்கள். இனிமேல் அப்படி செய்வதை நிறுத்தி பாருங்க. நீங்கள் தேடும் நிம்மதியை கடவுள் தருவார்" என்று சொன்னவுடன் எதிப்பாளர்கள் கண்களில் கண்ணீர் தரைதாரையாக வந்ததாகவும், அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அந்தநாள் முதல் எமி கார்மைகேல் அவர்களை "அம்மா" என்று மனதார அழைத்ததாகவும் ஒரு வரலாறு உண்டு.
அனேக நேரங்களில் இந்த எதிர்பாளர்கள் போன்றுதான் இருக்கிறோம். இப்படிபட்டவர்கள்தான் அடுத்தவர்களை குறைகூறுவதில் அலாதி இன்பம் காண நினைப்பாங்க. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று விதண்டா வாதம் செய்ய தூண்டுவதும் இதுபோன்ற குணங்கள் இருப்பதினால்தான்.  இவர்களுடைய சமாதானத்தை யாரும் கெடுக்கத் தேவை இல்லை. அனேக நேரங்களில் இவர்களே கெடுத்துக் கொள்வார்கள். தங்களுக்குத் தாங்களே வலை விரித்துக் கொண்டு, அதில் சிக்கி வெளிவர முடியாமல் முழித்துக் கொண்டு, பீஸ் ஆப் மைண்டுக்கும் குழி தோண்ட ஆரம்பித்து விடுகின்றனர்.
             இவர்கள் தன்னைப் போன்று பிறரை நேசிக்க முயற்சி செய்யாதவர்கள். குறைகளை நேரில் சுட்டிக் காட்டத் தவறுபவர்கள். நிறைகளை எற்றுக் கொண்டு பாராட்டத் தயங்குபவர்கள். நான் நினச்சதுதான் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக்கொண்டு வாழ்க்கை பயணத்தில் தடுமாறுபவர்கள்.  அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடையாமல்  பொறாமை என்னும் ஆமைமீது சலிப்பாக சவ்வாரி செய்து, வாழ்க்கையில் வெறுப்பை சம்பாதித்தவர்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த குறை சொல்லும் எதிர்ப்பாளர்கள் கூட்டத்தில் இருந்தோம் என்றால் சுய பரிசோதனை செய்துகொள்வது காலத்தின் கட்டாயம். 
             இன்னும் சில பேர் எப்போதும் சண்டை போடுவதிலும், பழிக்குப் பழி வாங்குவதிலும் நிறையவே கை தேர்ந்தவர்கள். ஏனென்றால் அவர்களுடைய தொழிலே அதுதான். இவர்கள் சமாதானம் என்றால் என்ன கலருன்னு கேட்கக் கூடிய ஆட்கள். பீஸ் ஆப் மைண்ட் என்பதெல்லாம் இவர்களுக்கு எட்டாத கனியாகவே இருந்தாலும், அதன் காரணத்தை அறியக் கூட இவர்களுக்கு மனசு இருக்காது.  “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” எனப் பழி வாங்கும் படலம் முடியும் வரை இவர்களுக்குத் தூக்கமே வராது. செய்வதெல்லாம் செஞ்சிட்டு “எனக்கு பீஸ் ஆப் மைண்டே இல்ல”ன்னு முதலைக் கண்ணீர் வடிச்சா அதுக்கு யார் பொறுப்பு? இதே பழிவாங்கும் வெறியையும் துடிப்பையும் வேறு எந்த முறையிலாவது செலவிட்டிருந்தால் சந்தோஷமும் சமாதானமும் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருக்குமே!
இப்பவாச்சும் சிந்திங்க சீரியஸா. கொஞ்சம் யோசிச்சிட்டு, சரி, அப்புறம் பார்க்கலாம்னு தள்ளிப் போட்டிங்கன்னா பீஸ் ஆப் மைண்டும் உங்களை ஒட்டாது. “அவன் என்னைப் பார்த்து இப்படி சொல்லிட்டானே? கூடப் பிறந்த எனக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டானே? நான் அவன சும்மா விட மாட்டேன். பழி வாங்கியே தீருவேன். அவன உண்டு இல்லேன்னு பண்றேன் பார்” போன்ற வீர வசனங்கள் ஒரு நாளும் பீஸ் ஆப் மைன்டைக் கொண்டு வருவதில்லை, மாறாகக் கொஞ்சம்கொஞ்சமாக சமாதானத்தைக் கொன்று விடும். மறப்போம், மன்னிப்போம், மகிழ்ச்சியாய் வாழ்வோம் என்ற உறுதி மொழியை இறுதி மொழியாக ஏற்றுக் கொண்டு சமாதானத்தைத் தேடி வெற்றி நடை போடுவோம். சமாதான உலகை நிச்சயம் படைப்போம்.
சமாதானப் பிரியர்கள்   Dr. M. கிறிஸ்துதாஸ், Dr. R. பிரவினா கிறிஸ்துதாஸ்
                                        
3. கடைசி காலத்தில் சமாதானம் சாத்தியமா?

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவினாலும் நம் யாவருக்கும் கிருபையும் சமாதானமும் நிறைவாய் உண்டாயிருப்பதாக. சமாதானத்தின் தேவனின் குமாரனான இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபமாய் இருக்கிறது. தேவன் நம் மேல் வைத்த அன்பின் மிகுதியால், மனிதன் பாவத்தில் அமிழ்ந்து போவது தேவனுக்குப் பிரியம் இல்லாத காரணத்தால் மனித குலத்தைப் பாவத்திலிருந்து மீட்டு எடுப்பதற்காக பாவமில்லாத ஒருவர் மனுக்குலத்தின் மீட்புக்காக பலியாக்கப்படுவது அவசியமாய் இருந்தது.
மனுக்குலத்திலே பாவம் இல்லாதவர்கள் யாருமே இல்லை. எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்களாக இருந்தார்கள். எனவே தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனாகிய கிறிஸ்துவைப் பாவ நிவாரண பலியாக ஒப்புக் கொடுத்தார். அதன் காரணமாக மரியாளின் கர்ப்பத்தில் பரிசுத்த ஆவியால் உற்பவித்து இயேசு என்று பெயரிடப்பட்டு இந்த உலகத்தில் முப்பத்தி மூன்றரை வருடங்கள் மனிதராகவே வாழ்ந்தார். கடைசியில் மூன்றரை வருடங்கள் முழுவதுமாக தேவன் தன்னை உலகத்திற்கு அனுப்பினதின் நோக்கத்தை நிறைவேற்றினார்.
இயற்கை அவருக்குக் கீழ்படிந்தது. குருடர்கள் பார்வை அடைந்தார்கள். முடவர்கள் நடந்தார்கள். தீர்க்கப்படாத நோய்கள் அவருடைய வார்த்தைகளால் நீங்கிப் போயின. பிசாசுகள், மந்திர தந்திரங்கள் அவரைக் கண்டு நடுங்கின. இறந்தவர்கள் உயிரோடு எழும்பினர். இவை யாவற்றையும் தேவனுடைய வார்த்தையினாலே செய்தார். ஆனால் மனித குலமோ அவரை சிலுவையில் ஒப்புக் கொடுத்தது. சிலுவையில் கிறிஸ்து மரிக்க வேண்டும் என்பது பாவ மனிதர்களின் விருப்பமாக இருந்தாலும் தேவனும் கிறிஸ்துவை மனுக்குலத்திடம் ஒப்புக் கொடுத்தார். அவர் சிலுவையில் ஆணிகளால் கடாவப்பட்டார்.
கடுமையான வேதனையின் மத்தியிலும் தன்னை சிலுவையில் ஒப்புக் கொடுத்த மனிதர்களையோ, அடித்தவர்களையோ, கேலிசெய்தவர்களையோ அவர் சபிக்கவில்லை. மாறாக, ‘தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்று’ தேவனிடத்தில் மனித குலத்திற்காக வேண்டிக்கொண்டார். ஆம், கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று அறியாத காரணத்தினாலே 2000 வருடங்களுக்கு முன்னால் கிறிஸ்துவை சிலுவையில் அடித்துக் கொலை செய்தார்கள். ஆனால் தேவன் அவரை அப்படியே விடவில்லை. மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பினார். ஆம், கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார். ஆனாலும் அவர் பாவத்தை ஜெயித்தவராக, மரணத்தை ஜெயமாக விழுங்கினவராக இப்போதும் உயிரோடு இருக்கிறார். தேவனுடைய வலது பாரிசத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார்.
கிறிஸ்துவுடைய இரண்டாம் வருகை சமீபமாக இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. அவர் இப்போது ஒரு நியாதிபதியாக வரப்போகிறார். ஒவ்வொரு மனிதனும் தன் தன் பாவத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாத படிக்கு அவருடைய வருகையின் நாள் கடுமையாக இருக்கும். முதல் முறை இந்த உலகத்திற்கு கிறிஸ்து வந்த போது உலகம் அவரை சிலுவையில் அடித்துக் கொலை செய்தது. இரண்டாம் முறை அவர் வரும் போது எந்த உலகம் அவரை சிலுவையில் அடித்ததோ அதே உலகத்தைத் தம் வார்த்தையை கொண்டு நியாயம் தீர்ப்பார்.
நம்முடைய பணம், பொருள், அந்தஸ்து, படிப்பு, பதவி, பொன் போன்ற எந்த வித உலக செல்வாக்கும்  நம்மைக் காப்பாற்றாது. ஏனென்றால், எல்லாம் அழிந்து போகும். புத்தியில்லா மிருகங்களைப் போல சுபாவப்படி, தங்களுக்குத் தெரிந்து இருக்கிறவைகளாலே தங்களை கெடுத்துக் கொள்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது. நாம் நம் கண்கள் காண்கிற படி, நம்மைச் சுற்றி இருக்கிற உலக நட்த்தையின் படியே செல்கிறோம். நமக்குள் இருக்கும் ஆத்துமாவை மறந்து விடுகிறோம். சரீரத்தையும், சரீரம் சார்ந்த காரியங்களிலும் அதிக அக்கறை செலுத்துகிறோம்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், திருச்சபைகளிலும் நாமாகவே வரைமுறைகளையும், சட்டதிட்டங்களையும், சடங்காச்சரங்களையும், அந்தஸ்து பேதங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஆத்தும தாகம் இல்லை. ஒவ்வொருவரும் தன்னுடைய ஆத்துமாவைத் தேட வேண்டும். வசனத்தின் மூலமாக மட்டுமே நம்முடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்க முடியும். இந்த ஆத்துமாவை நாம் இந்த உலகத்தில் வாழும் கடைசி நிமிடம் வரை ஜீவனோடு வைத்திருக்க வேண்டுமானால் வேத வசனமும் ஜெபமும் கட்டாயம் தேவை.
ஆத்துமாவுக்கு அழிவில்லை. ஆனால் நியாயத் தீர்ப்பு உண்டு. சரீரமோ அழிந்து போகும். வேதம் சொல்லுகிறது: மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவ ஆத்துமா ஆனான். மனிதனின் சரீரம் பூமியின் மண்ணில் இருந்து எடுக்கப் பட்ட்து. அது மண்ணுக்கே சொந்தம். ஆனால் அவனுக்குள் இருக்கிற ஜீவ ஆத்துமா தேவன் கொடுத்தது. அது தேவனுக்கு மட்டுமே சொந்தம். ஆத்துமாவுக்கு அழிவில்லை. ஆனால் பாவமில்லாமல், வேத வசனத்திற்குக் கீழ்ப்படிந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். என் ஜனங்கள் அறிவில்லாமையால் சங்காரம் ஆகிறார்கள் என்றும், வேதத்தைப் பற்றி அறிகிற அறிவுதான் ஞானத்தின் ஆரம்பம் என்றும் வேதம் சொல்லுகிறது. வேத அறிவு இருந்தும், தேவனை நாங்கள் அறிந்திருக்கிறோம் என்று அறிக்கை பண்ணினாலும் அவர்களுடைய கிரியை தேவனுக்கு பிரியம் இல்லாமல் இருக்குமானால் அவர்கள் அருவருக்கப் படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியைகளும் செய்ய ஆகாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
 இப்படியாக  தேவனை அறிந்திருந்தும் நாம் பாவம் செய்கிறோம். மற்றவர்களை அல்ல நம்மை நாமே பார்க்க வேண்டும். தேவனுக்குப் பிரியம் இல்லாத காரியங்களை வேத வசனத்தின் மூலம் கண்டறிந்து ஜெபத்தின் மூலம் பாவ மன்னிப்பைப் பெற வேண்டும். இந்த மன்னிப்பு இலவசமாய்க் கிறிஸ்துவின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. ஆதலால், நம்முடைய பாவங்களுக்காக நாம் மனம் உடைந்து, இருக்கும் இடத்தில் இருந்து கண்ணீரோடு ஜெபித்தால் ரட்சிப்பு நமக்குக் கிடைக்கும். தேவ சமாதானமும், நன்மைகளும் நம் குடும்பத்தை நிரப்பும்.
கிறிஸ்துவின் வருகையின் நாளன்று நமக்கு நியாயத் தீர்ப்பு மட்டுமே வைக்கப் பட்டுள்ளது. நியாயத் தீர்ப்பு நாளின் போது இரக்கம் என்பதை எதிர்பார்க்கவே முடியாது. அன்று அவர் நீதியுள்ள நியாயாதிபதியாக மட்டுமே வருவார். ஆகையால் இப்போது கொடுக்கப் பட்டுள்ள கிருபையின் காலங்களை வீணாக்காமல் நம்மையும் நம்முடைய ஆத்துமாவையும் கர்த்தருக்குள் காத்துக் கொள்வோமாக.
வானமும் பூமியும் ஒழிந்து போம்!
மனிதனின் நாட்களும் முடிந்து போம்!
அழியாத வாழ்க்கை உம் கையில்!
தந்தேன் நீர் என்னை நடத்திடுமே!
ஆமென்.                                                                                                                          ஜெபா ரஞ்சித்                  
 4. யூத்-பேரண்ட்ஸ் கார்னர்
பொதுவாக அட்வைஸ் என்றாலே பிடிக்காத வயசுதான் இந்த யூத். யாராவது வீட்டுக்கு வந்து” “உங்க சன்/டாட்டர் எப்படி இருக்காங்க?”ன்னு கேட்டாங்கன்னா அவ்வளவுதான்! மண்டையே வெடிச்சிடும். “எப்படா இந்த அறுவ கேஸ் போகும்”னு திட்டுவதுதான் இந்த யூத். வெளியில போகும்போது யாராவது தெரிஞ்சவங்க வந்து உங்க பையனுக்கு/பொண்ணுக்கு ஸ்டடி கவுன்சலிங் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தோம் என்று வந்துட்டாங்கன்னா கேட்கவே வேண்டாம். கோபம் தலைக்கு மேல் போய்விடும். “எப்படா இந்த ஆளு போய் தொலைவான்?” என்று மண்டையப் பிச்சிக்கிட்டு இருப்பவங்கதான் இந்த யூத். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
       சரி, பேரண்ட்ஸ்கிட்டே இந்த யூத் எப்படி? “இதைச் செய், அதைச் செய்யாதே, இங்கே வா, அங்கே போகாதே, இப்படி இரு, அப்படி இருக்காதே, இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடாதே, சீக்கிரம் தூங்கு, காலமே எழும்பு, தூங்காதே, எந்திரிச்சி ஒழுங்கா பரிட்சைக்கு படி” ன்னு அப்பாம்மா பசங்கக்கிட்டேயோ, பொண்ணுங்கக்கிட்டேயோ சொன்னா பெரும்பாலான யூத்தோட பதில் இப்படித்தான் இருக்கும். “ஐயோ! என்ன இது? ஏன் என்ன தொந்தரவு பண்றீங்க? உங்களுக்கு வேற வேலையே இல்லையா? எனக்கு எல்லாம் தெரியும். எரிச்சலைக் கிளப்பாதீங்க! இரிட்டேட் பண்ணாம ஒழுங்கா இங்கிருந்து போயிடுங்க. எதை எப்படி எப்போ செய்யணும்னு எனக்குத் தெரியும். நான் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல. உங்களோட வேலை எதுவோ அதைப் போய் பாரு, ப்ளீஸ்” என்றுதான் பெற்றோரோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
             இந்தக் கூத்துதான் எல்லாரோட வீட்லேயும் டெய்லி நடந்துக்கிட்டு இருக்கே, ஒண்ணும் புதுசு இல்லயே. இதுனால யூத்துக்கும், பேரன்ட்ஸ்க்கும் பீஸ் ஆப் மைண்ட்இருக்காதுன்னு எப்படி மொட்டையா சொல்ல முடியும்? என்ற கேள்வி ஒரு சிலருக்கு வரலாம். ஒரு நிமிஷம் பொறுங்க. ஆதாரத்தோட வெளியிடப்பட்ட ஓர் ஆராய்ச்சியோட முடிவைச் சொன்னா தெளிவா புரிஞ்சுக்குவீங்க.
 நம்ம நாட்டுத் தலை நகர் தில்லியிலிருந்துதான் அந்தத் திடுக் தகவல். ஹெல்ப் ஏஜ் இந்தியா என்கிற ஒரு என்.ஜி.ஓ. நடத்திய ஆராய்சியோட ரிப்போர்ட் 15 ஜூன் 2013ல் டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பரில் வெளியாகியது. யூத்-பேரன்ட்ஸ் உறவில் வேதனைதான் சாதனை என்ற சோகக் காட்சியைப் புள்ளி விவரத்தோடு படிக்கும்போது காலம் எப்படி கெட்டுக் கிடக்குதுன்னு புரியும்.
   அந்த ரிப்போர்ட் படி டெல்லியில் கடந்த இரண்டு வருடங்களில்:
     (1) 41 சத விகித பேரன்ட்ஸ் (முதியவர் உட்பட) மரியாதை இல்லாமல் அடிமை போன்று வீட்டில் நடத்தப்பட்டு வருகிறர்கள்.
     (2) 32 சத விகித பேரன்ட்ஸ் ரொம்பவும் கேவலமாக காது கூசக்கூடிய அளவுக்கு கன்னாபின்னான்னு திட்டப்படுறாங்க.
     (3) மிச்ச 27 சத விகித பேரன்ட்ஸ் அடிக்கப்பட்டு உதைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, உயிரோட செத்துக்கிட்டு இருக்காங்க.
இதனாலதான் என்னவோ, பேரண்ட்ஸ் மற்றும் வயசானவங்களுக்காக ஓல்ட் ஏஜ் ஹோம்கள் புற்றீசலாக மூலை முடுக்கெல்லாம் முளைச்சிக்கிட்டு இருக்குது. சரி. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இன்னொரு பக்கம் யூத், பேரண்ட்ஸ் பத்தி என்ன சொல்றாங்க? “எங்களை எப்பவும் இரிட்டேட் பண்ற மாதிரி நடந்துக்கிறாங்க. சுயமா சிந்திக்க விட மாட்டேங்றாங்க. அடுத்தவங்களோட எப்பவும் கம்பேர் பண்ணி டிஸ்கரேஜ் பண்றாங்க” ன்னு குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கிட்டே போறாங்க.
இங்க பாருங்க, பேரண்ட்ஸ்சுக்கு சொல்ல விரும்புவதெல்லம் ஒண்ணே ஒண்ணுதான். கண்டிச்சி வளர்க்கிறேன் என்ற பேரில் தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை வலுக்கட்டாயமாகத் திணிக்காதீங்க. அதே சமயத்தில் உலகம் தெரியாமலும் பிள்ளைகளை வளர்த்துவிடாதீர்கள்.  அட்வைஸ் என்ற பெயரில் கட்டளைகளை வலுக்கட்டாயமாக திணிப்பது அவர்களுக்கு அதிருப்தியையும் கோபத்தையும் கொடுத்து வாழ்க்கையில் பீஸ் ஆப் மைண்ட் இல்லாமலேயே ஆக்கிவிடும்.
பின்னர் ஏதாவது நடக்கக் கூடாதது நடந்துவிட்டால், நான் தப்பு பண்ணிட்டேனே! அப்படி செஞ்சிருக்கலாமோ? இப்படி செய்திருக்கலாமோ? என்று வருத்தப்பட்டு  புலம்புவதில் அர்த்தம் இருக்காது. ஞானமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு எதில் இண்ட்ரெஸ்ட் அதிகம் என்று தெரிந்து கொண்டு அதை என்கரேஜ் பண்ணிக் கொண்டே இருப்பார்கள். இப்படி ஒரு நிலைமை உங்க குடும்பத்தில் இருந்தா சீரியசா சிந்திங்க. அப்போதுதான் உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நல்ல உறவு இருக்க முடியும். அப்படி இருந்தால்தான் சமாதானம் இருக்கும். சமாதானம் இருந்திச்சின்னா ஆட்டமெட்டிக்கா சந்தோஷமும் வந்துவிடும்.
ஹலோ யூத்! நீங்களும் சின்சியரா சிந்திக்கணும். எந்த அப்பா அம்மாவும் தன் பிள்ளை கெட்டுப் போகணும்னு விரும்ப மாட்டாங்க. சில சமயங்களில் அவங்க உங்கள புரிஞ்சிக்காம நடந்தாலோ, புண்படும் படியா பேசுவதாக நினைத்தாலோ, கவலைப்படாதீர்கள். அவங்கள எதிர்த்துப் பேசி, அவங்களோட சண்டை போட்டு உங்க நேரத்தையும், சக்தியையும் ஏன்   இழக்க   வேண்டும்?  தாயின் போதகத்தையும், தகப்பனுடைய புத்தியையும் ஒருநாளும் கொரச்சி எடை போடாதிங்க.  நீடித்த வாழ்க்கை வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அப்பாம்மாவை கண்டிப்பாக கனம் பண்ணவேண்டும்.  அவங்களுக்கு கீழ்ப் படிங்க. அது ஒரு மிகப் பெரிய பிளசிங்.
            சீரியஸா திங்க் பண்ணுங்க. பேரண்ட்ஸுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிற யூத்தா இருக்கீங்களா? இல்லேன்னா அவங்களோட கொஞ்சநஞ்ச சந்தோஷத்தையும் கம்ப்ளீட்டா கெடுக்கிற டேஞ்சரஸ் யூத்தா இருக்கீங்களா? கெட்ட குமாரனாக/குமாரியாக கெட்டழியாது இருப்பதும், நல்ல குமாரனாக/குமாரியாக இருப்பதும் உங்க கையிலதான் இருக்கு. கெட்ட குமாரனாக இருந்தீங்கன்னா, அயம் சாரி! நோ பீஸ் ஆப் மைண்ட்! நோ ஹேப்பினஸ்! நோ சமாதானம்! மனம் மாறி நல்ல குமாரனாக இருந்தீங்கன்னா சமாதானமும் சந்தோஷமும் உங்க பிரண்ட்ஸ் ஆகி விடுவாங்க. அப்புறம் எப்போதும் ஜாலிதான்! சமாதானக் குடும்பம்! சந்தோஷக் குடும்பம்! முடிஞ்சா இந்த டிப்ஸ டிரை பண்ணுங்க, சமாதானத்தோடு சந்தோஷமா இருக்க நினைச்சீங்கன்னா!
    சமாதானப் பிரியன்
       
         5. சமாதானத்தைத் தேடி...........ஒரு பயணம்
சமாதானம் என்பது நமக்குத் தேவையானது எல்லாம் கிடைத்து விட்டால் வராது. மாறாக எல்லாப் பாடுகளின் மத்தியிலும் நமக்கு உள்ளத்தில் இருப்பதுதான் சமாதானம்.
ஒரு ராஜா ஒரு தடவை ஓர் அறிவிப்பை வெளியிட்டான். அது என்னவென்றால் சமாதானத்தைப் பற்றி சிறந்த படத்தை வரைந்து வருபவருக்கு தகுந்த பரிசு வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. அதிகமான ஓவியர்கள் முயற்சி பண்ணினார்கள். ராஜா அங்கிருந்த இரண்டு ஓவியங்களை மட்டும் தெரிந்தெடுத்தார்.
ஒரு ஓவியமானது அமைதியான ஆறு. அந்த ஆறு கண்ணாடி போன்று மிகவும் தெளிவாக இருந்தது. அதனைச் சுற்றிலும் அமைதியாகத் தோற்றமளிக்கும் உயர்ந்த மலைச்சிகரங்கள் இருந்தன. அதற்கு மேலாக நீல வானில் தூய்மையான மேகங்கள் இருந்தன. அனைவரும் எண்ணினர்: இதுதான் சமாதானத்தைப் பிரதிபலிக்க்க் கூடிய சிறந்த ஓவியமாக இருக்கும் என்று.
மற்றொரு ஓவியம்: அதிலும் மலைகள் இருந்தன. ஆனால் அவைகள் பள்ளம் மேடுகள் நிறைந்ததாய் கரடுமுரடாய் இருந்தன. அதற்கு மேலாக கோபமான வானம். அதிலிருந்து மழைத்துளிகள் விழுந்தன. மின்னல்கள் பயமுறுத்தின. மலையிலிருந்து மழை நீர் ஒழுங்கின்றி, பயங்கர சத்தத்துடன் விழுந்து கொண்டிருந்தது. இது பார்ப்பதற்கு சமாதானமாக இல்லை. ஆனால் நீர் வீழ்ச்சிக்குப் பின் புறம் சிறிய புதர் பாறையின் வெடிப்பில் வளர்ந்து காணப்பட்டது. அந்தப் புதரில் ஒரு தாய்ப்பறவை ஓர் அழகான கூடு கட்டி மிகவும் சந்தோசமாக இருந்தது.
எந்த ஓவியம் பரிசைப் பெற்றிருக்கும் என நினைக்கிறீர்கள்? ராஜா இரண்டாவது ஓவியத்தைத்தான் தெரிவு செய்தார். எதனால்? ஏனெனில், சமாதானம் என்பது, எங்கே சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்கிறதோ, அது அல்ல. பிரச்சினை இல்லாமல் இருப்பது அல்ல. மாறாக, சமாதானம் என்பது, பிரச்சினைகள், கஷ்டங்கள் மத்தியிலும் நம் உள்ளத்தில் அமைதி இருப்பதுதான். அதுதான் உண்மையான் சமாதானம்.
என்ன? இந்த கதை சொல்லும் கருத்து நம்ம வாழ்க்கைக்கு எந்த அளவு பொருத்தமா இருக்கு? இது சிந்திக்கும் காலம், சீரியஸா.  [Picture of Peace என்ற புத்தகத்திலிருந்து] 
பிரின்ஸ் & கிறிஸ்டி
                 6. இந்த சமாதான மலரைப் பற்றி...
‘ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியில் இருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்’ என்று வெளிப்படுத்தலில் கூறப்பட்டுள்ளது.
ஜெயம் கொள்ளுகிறவர்களாக நாம் இந்த உலகத்தில் வாழ வேண்டுமானால், இந்த உலகத்தில் தேவனுக்காக நான் என்ன செய்கிறேன், அல்லது குடும்பமாக நாம் என்ன செய்கிறோம் என்று யோசிக்க வேண்டும். இவ்வாறு யோசிக்கும் போது உருவானதுதான் சமாதானம் டிரஸ்ட். இந்த டிரஸ்ட் மூலமாக, கைவிடப்பட்டக் குடும்பங்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமுதாயத்து மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும், ஆலயங்கள் எழுப்ப வேண்டும் என்ற உணர்வோடும், ஏழை எளிய மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது என்கிற வேத வசனம் நிறைவேறத்தக்கதாகவும் குடும்பமாக இந்த டிரஸ்டை உருவாக்கியுள்ளோம்.
சமாதானம் டிரஸ்டின் ஒரு பகுதிதான் சமாதானம் மலர். இந்த மலர் மூலமாக கர்த்தருடைய சமாதானம் ஒவ்வொரு குடும்பத்தையும் மணமாக நிரப்ப வேண்டும். விசுவாசத்தின் பெலனாகிய ஆத்தும ரட்சிப்பை சமாதான மலர் மூலமாக குடும்பங்களுக்குள் கொண்டுவர பிரயாசப்படுகிறோம். அழிந்து போகிற ஆத்துமாக்களை மீட்டு எடுக்க, இந்த சமாதான மலர் மூலமாக தேவன் எங்களை வழி நடத்துவார். ஒவ்வொருவரும் தினமும் ஜெபத்திலே தாங்கும்படியாய் கேட்டுக்கொள்கிறோம்.

          7. கேள்விகளுக்கு விடை சொல்லுங்க-பரிசைத் தட்டிச்  செல்லுங்க!
1.   முதன் முதலில் அமைதிக்காக நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
2.   1979-ஆம் ஆண்டிற்கான அமைதி நோபல் பரிசைத் தட்டிச் சென்றவர் யார்?
3.   ’கண்ணுக்குக் கண்’ என்ற பழிவாங்கும் எண்ணம் இருண்ட காலத்திற்கே அழைத்துச் செல்லும் என்று கூறியவர் யார்?
4.   போரில் வெற்றி பெறுவதை விட சமாதானத்தை நிலைநாட்ட முயற்சிப்பதுதான் புத்திசாலியின் அறிகுறி என்றவர் யார்?
5.   2012-ல் வெளியிடப்பட்ட குளோபல் பீஸ் இண்டெக்ஸ் படி, உலகத்திலேயே ரொம்பவும் அமைதியான நாடு எது? நிச்சயமா நம்ம நாடு இல்ல...
பதில்களை அனுப்ப வேண்டிய அட்ரெஸ் [செப்டெம்பர் 15 ஆம் தேதிக்குள்] 
Mr. D. Ranjit Singh
C-206, Millennium Apts., Sector-18, Rohini,
Delhi-110085
சீனியர் சிட்டிசன் பகுதி  
8. சங்கிலிகளின் பிணைப்பில் சமாதானம்
காலையில் நான்கு கால்களிலும்
மதியம் இரண்டு கால்களிலும்
மாலையில் மூன்று கால்களிலும்
நடக்கும் மிருகம் எது?
இப்படி கேட்கிறது ஒரு ஸ்பிங்ஸ் புதிர் (Riddles of Springs).
குழந்தையாகப் பிறக்கும் மனிதன் குழந்தையாகவே மாறி இறந்து போகிறான். பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து ஆளாகும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் குழந்தைகளாக மாறும் முதிய பருவத்தில் பெற்றோராக மாறி அவர்களைப் பேணும் கடமையைப் பெற்றிருக்கிறார்கள். இது ஓர் இயற்கை நீதி. தன்னைப் பாதுகாக்கும் கடமை பெற்றுள்ள மனிதனின் வெப்பக் காற்றை சுவாசித்து உயிர்க்காற்றை வெளியிட்டு மரம் கூட நன்றி காட்டுகிறது. தாலாட்டி வளர்த்தக் குழந்தைகள் தங்களைத் தாங்கிப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் முதுமையை நோக்கி அடி எடுத்து வைக்கிறார்கள்.
முதிர் வயதில் சமாதானம் மிகவும் முக்கியமானது. “நல்ல முதிர் வயதில்..நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்!” என்பது தேவன் ஆபிரகாம் போன்ற நமது ஆதி பிதாக்களுக்கு அளித்த வாக்குத்தத்தம் (ஆதி. 15.15).
ஆனால் இன்று வெளியிடப்படும் புள்ளி விவரங்களும் காதில் விழும் செய்திகளும் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. பெங்களூர் மாநகரில் ஒரு கொடூரம். இரண்டு மகன்கள் தங்கள் தந்தையைக் காலையில் மொட்டை மாடியில் ஒரு கூரையின் கீழ் கொண்டு போய் சங்கிலியால் கட்டிப் போட்டு விடுவார்களாம். ஒரு அலுமினியக் குவளையில் உணவும் தண்ணீரும். பின் இரவு வீட்டுக்குள் கொண்டு போய் படுக்க வைத்து விடுவார்கள். காரணம் அவர் வீட்டை அசுத்தம் செய்து விடுவாராம். இதுவாவது பரவாயில்லை. தமிழ் நாட்டில் ஒரு தந்தையை மகன்கள் சுடுகாட்டிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். ஒரு சில வசதி உள்ள பிள்ளைகள் வீட்டிலேயே ஒரு அறையை ஒதுக்கி சாகும்வரை தனியாக அடைத்து வைத்து விடுகின்றனர். கடைசி காலங்களில் அன்பு தணிந்து போகும் என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் அணைந்தே போய்விட்டதே!
கூடவே ஆறுதல் அளிக்கும் செய்திகளும் உண்டு. தனது வயதான நோயாளி அம்மாவைப் பார்ப்பதற்காகவே தனது மாவட்ட ஆட்சித் தலவர் பதவியை விட்டு விலகி வந்து விட்டாராம் ஒரு பாசமிக்க மகள்!
 முதிர் வயதில் சமாதானம் என்பது ஒரு முக்கியமான சமுதாய உள்வியல் பிரச்சினை. இதைப் பற்றி பெற்றோரும் பிள்ளைகளும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
            பெண்களையும் முதியவர்களையும் ஒரு தேசம் எப்படி நடத்துகிறது என்பதைக் கொண்டே அதன் குடி மக்களை எடை போட முடியும். அப்படியானால் இந்தியாவை?
பென் செருபாபெல்


9. வெளியே புகைவது நான் ஆனால் உள்ளே எரிவதோ நீ!

ஸ்டைலுக்காகவும், மன எழுச்சிக்காகவும், தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்சனைகளை ஒருநிமிடம் மறப்பதற்காகவும், வேலையின்மை காரணத்தாலும், மனஅழுத்தம் அதிகமான நேரத்திலும், கவலை வாட்டி வதக்கும் பொழுதும், வேலைப்பழு அதிகமாவதாலும், பசியையும்,  உடல்  வெயிட்டையும்  குறைப்பதற்காகவும், நிம்மதி  எங்கே எங்கே என்று தேடி அலையும்போதும், தான் செய்கிறது இன்னதென்று தெரிஞ்சிக்கிட்டே ஒரு சிகரெட்டை குப்புண்ணு பத்தவச்சாதான் வண்டி ஓடும், கொஞ்சம் மைண்டும் பிரியாக இருக்கும்ன்னு நினைச்சிங்கன்னா உங்களைமாதிரி ஒரு அடிமையிலும் பிரதான அடிமையை இந்த உலகத்தில் பார்ப்பது ரொம்ப கஷ்டம் சார் .

அதேமாதிரி மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் உடலுக்கும், வீட்டுக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் கேடு என்ற உண்மை வெளிப்படையா கொட்டை எழுத்தில் ஒட்டியிருந்தாலும், மரணத்தை விலைகொடுத்து வாங்க துடிக்கும் விந்தை மனிதர்கள் ஏராளம், ஏராளம்.

‘புகை பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது’, ‘புகை கொல்லும்’ போன்ற வாக்கியங்கள் சிகரெட் பெட்டிகளில் அச்சிட வேண்டும் என்று சட்டம் இந்தியாவில் உள்ளது.  புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகளை சித்தரிக்கும் படங்களை அச்சிட வேண்டும் என்று     ஒரு சட்டமும் 2008-ம் ஆண்டு கொண்டு வரப் பட்டது. ஆமா அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பொதுவாக தம் அடிக்கிறவங்க ஏதோ ஒரு பொழுதுபோக்காகவோ, அல்லது விளையாட்டாகவோதான் ஆரம்பிக்கிறாங்க. போகபோகத்தான் பிரச்னை முற்ற ஆரம்பிக்குது. இருந்தாலும் பயப்படாதீங்க.  வெள்ளம் ஒண்ணும் இப்ப தலைக்குமேலே போய்விடவில்லை. கீழே உள்ள பகுதியை விளையாட்டாக படிக்காம ரொம்ப கவனமா படிச்சிங்கன்னா நீங்க விடமுடியாத இந்த தீய பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிடலாம். கீழே உள்ள 5 கேள்வியை உங்க மனசுக்குள்ளே பலமுறை கேட்டுப்பாருங்க.

1. புண்பட்ட மனதை புகைப்போட்டு ஆத்துகிறேன்னு சொல்லிட்டு, மரணத்தை விலைகொடுத்து வாங்கக்கூடிய அளவுக்கு என்னோட புத்தி கம்ப்ளீட்டா கெட்டுப் போயிடுச்சா? 
2. சினிமாக்காரன் குடிக்கிறான் அதனால நானும் டிரை பண்றேன் இதுல என்ன தப்பு என்று என்னையே ஏமாற்றி என்னோட சுய அறிவை தொலைத்துவிட்டு ஏன் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டும்?   
3.  கவலையை மறக்கப்போகிறேன்னு சொல்லிட்டு கையளவு இதயத்தையும், கல்லீரலையும், ஒட்டுமொத்த உடம்பையும் கெடுத்துவிட்டு, கண்ணீரோட வாழ்க்கையை நடத்தி கடைசியில் தற்கொலைதான் முடிவுன்னு ஏன் சமாதானமில்லாமல் உயிரை மாய்க்கவேண்டும்?
 4.ஒருநிமிஷ போலி இன்பத்துக்காக அடிமையா குற்றுயிரும், கொலையுயிருமாக நிம்மதியற்று ஏன் வாழணும்?  
5. சும்மாவே பலத்தின் மிகுதியால்தான் 80 வருஷம் உயிர் வாழ்றாங்க. இப்படி, தம்மு, தண்ணின்னு அடிச்சிட்டு பாதி வயசிலேயே போயிசேர்ந்த்துட்டேன்னா, என்னை நம்பி வாழும் என்னோட அன்பு மனைவி, புள்ளைங்கண்ணு எல்லோரும் அனாதையா அம்போன்னு நடுரோட்ல நிப்பாங்கன்னு தெரிஞ்சும் எப்படி இந்தமாதிரி ஒரு கல்நேஞ்சுக்காரனாகிவிட்டேன் ?   
            இங்க பாருங்க சார், புகை பிடிப்பது நல்ல பழக்கமா இல்ல கெட்ட பழக்கமான்னு பட்டிமன்றம் நடத்த வரல. தேவையில்லாமல் உச்சந்த்தலைமுதல் உள்ளங்கால்வரை வேதனையை விலைகொடுத்து வாங்கணுமா?  ஒன்றைமட்டும் தெளிவாக புரிந்துகொள். சிகரெட்டில் நெருப்பை பத்தவைக்கும்போது வெளியே வருவது புகைமட்டும்தான் ஆனால்உள்ளே எரிந்து, நரகவேதனைப்படுவதோ நீ!  என் அன்பு நண்பா நீ “தம்” அடிப்பதால் உன்னோட    
         முடி நிறமாற்றம் அடைகிறது.
         மூளையானது புகைத்தலுக்கு அடிமையாகிறது. எப்போதும் புகைக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கும் நிலைக்கு மாறுவது.
         காண்பார்வை குறைபாடுகளை காட்ராக்ட் போன்றவை.
         மூக்குக்கூட பாதிப்புத்தான்.. மன நுகர்ச்சித்தன்மை குறைதல்.
         தோல் சுருங்கிப்போகும். இளவயதிலேயே வயதான தோற்றத்தை அடைதல்.
         பற்களின் நிறமாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி போன்றவை.
         வாய் மற்றும் தொண்டை பாதிப்புகள். உதாரணமாக உதடுகளின் வடு உண்டாவது,    உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல், துர்நாற்றம்.
         ரத்த ஓட்டம் குறைவதால் கைகால்கள் செயலிழக்கும் தன்மை. இரத்தத்தில் நிகோடின் படிவுகள் சேர்தல்.
         நுரையீரல் தொற்று நோய்கள், சுவாசப்பை புற்று நோய். நாட்பட்ட சுவாச அடைப்பு நோய், சுவாசப்பைத் தொற்று  ஆஸ்துமா போன்றவை.
         மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு.
         ஈரில் புற்று நோய்.
         இப்பழக்கம் நாளடைவில்  அல்சர், குடல், இரப்பை, சதை புற்றுநோய், நாடி வெடிப்பு போன்றவையும் ஏற்படும்.
         சிறுநீரகப் புற்று நோய், சிறு நீர்ப் பை புற்று நோய்.
         எலும்பின் உறுதி குறைந்து வலுவிழத்தல். இதனால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம்.
         இரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இரத்தப்புற்று நோய், இதனால் விரைவில் நோய்வாய்ப்படும் தன்மை உண்டாகுதல்.
         கால்கள் வலுவிழந்து,    உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படல்.

 ஆத்தாடி! இவ்வளவு நோய்நொடி வரும்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே இந்த பழக்கத்தை விட்டிருந்திருப்பேனே என்று புலம்பாதிங்க.  உங்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ். அப்படி என்ன வழி இருக்குன்னு கேட்கிறீர்களா? உண்மை என்னவென்றால், விடாமுயற்ச்சியும், விடவேண்டும் என்ற ஒரு வெறியும் இருந்தால் இந்த பழக்கத்துக்கு குட்பை சொல்லமுடியும். இந்த பழக்கத்தை தூக்கி எரிஞ்சிட்டீங்கன்னா, நீங்களும் ஒரு சாதனையாளர்தான். 

            முதலாவதாக, இந்த பழக்கத்தை நிரந்தரமாக விட்டு விட வேண்டும் என்று எண்ணம் உங்க மனசுல வரணும்.  ரெண்டாவதாக, புகை பிடிக்கும் போது ஒரு பெரிய மெதப்பு வருகிற மாதிரி தோணுறது முற்றிலும் பொய்யின்னு புரிஞ்சிக்கணும். மூனாவதாக, இனிமே புகை பிடிக்கமாட்டேன் என்று  முடிவு பண்ணியபிறகு இருக்கிற எல்லா பீடி, சிகரெட்டையும் தூக்கி வீசிடுங்க. முதல்ல மனசுக்கு ரொம்ப வேதனையாதான் இருக்கும். எதையோ இழந்தமாதிரி இருக்கும். நாலாவதாக,   மத்தவங்க முன்பு தன்னை ஒரு பெரிய ஆள் போல காட்டி கொள்வதற்காகவும், போலியான பெருமைக்காக புகை பிடிப்பதும், சுய அவமானம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

             ஒன்றைமட்டும் மிகத்தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இந்த டைம்லதான்  அடுத்தவர்கள் மூலமாக  சோதனை அடுக்கடுக்காக வரும். என்னடா மாப்ள, இந்தவயசுல என்ஜாய் பண்ணாம எப்ப பண்ணறது? ஒரு இழுப்பு இழு. ஒண்ணும் கொரஞ்சிரமாட்டன்னு நெருப்பை பத்தவச்சிக்கூட கொடுப்பாங்க. இந்த நேரத்தில் மனதை கண்ட்ரோல் பண்ணுங்க, வேறு திசையில் செலுத்தி காப்பி, கூல்ட்ரிங்க்ஸ், உணவுவகைகள், பழங்கள், என்று உங்களுக்கு மிகவும் பிடிச்சதை ருசிச்சி சாப்பிடுங்க.   அப்புறம் ஆட்டமட்டிக்கா  புகைக்கும் எண்ணத்தை குழிதோண்டி புதைச்சிடுவீங்க.  இப்படி கண்ணமூடிட்டு ஒருவாரம், ஓருமாசம், ரெண்டுமாசம்ன்னு உங்க “தம்” மை மறந்துட்டிங்க நீங்க ஒரு பெரிய கில்லாடிதான்.

சிகரெட்டுக்கு அடிமையா வாழணும்னு ஆசைப்பட்டீங்கன்னா குடிங்க, நல்லவே குடிங்க, குடிச்சிக்கிட்டே இருங்க கல்லீரலில் ஓட்டை விழுந்து கதறி அழும்வரை. சமாதானமா, சந்தோசமா, வாழணும்னு ஆசை இருந்தா, நல்லதொரு முடிவை சீக்கிரம் எடுங்க, மரணம் உங்களை சந்திக்கும் முன். 

            வாழ்க்கை ஒருமுறைதான். இறைவன் கொடுத்த சரீரத்தை கெடுத்து குட்டிசுவராக்காமல் வாழ்ந்துகாட்டுவேன். என் உடல் கடவுள் தங்கும் ஆலயமாக இருப்பதால் அதை எந்த முறையிலும் கெடுப்பதற்கு எனக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை என்று தீர்மானம் எடுத்தவங்களுக்கும், எடுக்கப்போறவங்களுக்கும், தீர்மானம் எடுக்கவா வேண்டாமா என்று நினைச்சிட்டு சரி, டிரை பண்ணி பார்க்கிறேன்னு   கிரீன் சிக்னல் காட்டியவர்களுக்கும் இந்த சமாதான மலர் சார்பாக ஒரு சல்யூட்.

சமாதானப் பிரியன்











With Best Compliments from RVC Tours and Travels

D. RANJIT
91-9312112068 

 RVC Tours and Travels, provide 24 hours service at Delhi, Agra, Jaipur, Amritsar, Wagah Border, Shimla, Kulu-Manali, Haridwar-Rishikesh, Kurukshetra, Mathura, Brindavan, Dehradun, Nainital, Mussoori, Jammu and Kashmir, Udaipur, Ajmer, and Chandigarh etc. Shop No. 19, G.F. Sarja Market Complex, Opp. M2K Cinema, Naharpur, Sector-7, Rohini, Delhi-85, Phone 011-27875769.   


இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இருந்து வெளியாகும் இந்தச் சமாதான மலர் பற்றிய கருத்துக்களையோ சமாதானத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட உங்கள் பொன்னான எழுத்துக்களையோ எங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

D. Ranjit Singh,
C-206, Millennium Apartments,
Sector-18, Rohini-110085
Phone: 011-27875769, Mobile: 09312112068